×

கோஹ்லி, குல்தீப் முன்னேற்றம்: ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை

துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு நாள் தொடருக்கான பேட்டிங், பவுலிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சுப்மன் கில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி 8வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு நகர்ந்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேஸ் ஹேசில்உட் முதலிடத்தில் உள்ளார். கடந்த சில போட்டிகளில் விக்கெட் வேட்டையாடும் இந்தியாவின் குல்தீப் யாதவ் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

The post கோஹ்லி, குல்தீப் முன்னேற்றம்: ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை appeared first on Dinakaran.

Tags : Kohli ,Kuldeep ,Dubai ,Virat Kohli ,Kuldeep Yadav ,Dinakaran ,
× RELATED உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை...